fbpx

BREAKING | டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்..!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு விசாரித்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த மே மாதம் முடிந்தது. அதனை தொடர்ந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அதேநேரம் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டு விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டது. அதன்படி, மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் திகார் சிறையில் அமலாக்கத்துறை காவலில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More : ரூ.279-க்கு ரீசார்ஜ் பண்ணுங்க..!! இத்தனை சலுகைகளா..? புதிய திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்டெல் நிறுவனம்..!!

English Summary

The Supreme Court has granted bail to Chief Minister Arvind Kejriwal, who is in Tihar Jail custody in the Liquor Policy Scam case.

Chella

Next Post

நேபாளம் நிலச்சரிவு | ஆற்றில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டதில் இதுவரை 7 பேர் பலி..!!

Fri Jul 12 , 2024
7 Indians killed as tourist buses fall into swollen river after landslide in Nepal

You May Like