நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருந்த, சுங்கக் கட்டண உயர்வை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கட்டண உயர்வை ரத்து செய்வது தொடர்பான கடிதம், நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டதாக தெரிகிறது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் காரணமாக கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், தேர்தல் முடிந்ததும், வரும் ஜூன் மாதத்தில் புதிய சுங்கக் கட்டணங்கள் மீண்டும் அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More : Holiday | கோடை விடுமுறையில் அதிரடி மாற்றம்..!! ஏமாற்றத்தில் மாணவர்கள்..!!