fbpx

#BREAKING | வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமா..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு..!!

ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாகவே தொடரும் என்று ஆர்பிஐ ஆளுநர் இன்று தெரிவித்தார். மேலும், வீட்டுக்கடன், வாகனக் கடனுக்கான தவணை வட்டியில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். இதன் காரணமாக வீடு, வாகனம், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் இப்போதைக்கு உயராது எனத் தெரிகிறது. ஏனென்றால், வழக்கமாக ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான விகிதத்தை உயர்த்தினால், வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தும்.

Chella

Next Post

பேன் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா..! உடனடியாக நீங்க இதை செய்து பாருங்கள்.!

Thu Feb 8 , 2024
பொதுவாக நம் தலையில் அழுக்கு, பொடுகு இருந்தால் பேன் தானாகவே வந்துவிடும். மனிதர்கள் மூலம் ஒருவருக்கொருவர் பரவும் ஒரு ஒட்டுண்ணி தான் பேன். ஒருவர் தலையில் பேன் இருக்கும்போது அவரின் அருகில் ஒருவர் படுத்து உறங்கினாலோ அல்லது அவர் பயன்படுத்திய துண்டு, சீப்பு போன்றவற்றை பயன்படுத்தினாலோ மற்றவர் தலையிலும் பேன் பரவி விடும். குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் அருகருகே அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் தினமும் ஈர தலையுடன் […]

You May Like