fbpx

#Breaking : ஈரோட்டில் வாக்கு எண்ணிக்கை தாமதம்.. செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு.. என்ன பிரச்சனை..?

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் சார்பில் மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.. இந்த தேர்தலில் மொத்தம் 74.79% வாக்குகள் பதிவானது.. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 17,477 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.. அதிமுக வேட்பாளர் தென்னரசு 5621 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளார்.. நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 1479 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 123 வாக்குகள் பெற்றுள்ளார்..

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 2 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.. எனவே வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை குறித்த பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் அல்லது செய்தியாளர்களை உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினருடன் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. எனினும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது..

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண் உன்னி பேச்சுவார்த்தை நடத்தினார்.. முதல் சுற்று வாக்குகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் உறுதியளித்ததை ஏற்றுக்கொண்ட செய்தியாளர்கள், அதிகாரப்பூர்வ பட்டியலுக்காக காத்திருக்கின்றனர்.. இதனால் 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது..

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், வெளிப்படைத்தன்மை உடனே வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக தெரிவித்தார்.. ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மைக்கில் அறிவிக்கப்படும் என்றும், அடுத்தடுத்த சுற்றுகளின் நிலவரம் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்..

Maha

Next Post

செம குட் நியூஸ்..!! அரசு ஊழியர்களுக்கு 17% சம்பள உயர்வு..!! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

Thu Mar 2 , 2023
மாநில அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 17 சதவீதம் சம்பளம் உயர்த்தி கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். 7-வது ஊதியக் குழு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில அரசு ஊழியர் சங்கம் போராட்டத்தைத் தொடங்கியதைத் தொடர்ந்து முதல்வர் அறிவித்துள்ளார். அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடனான சந்திப்பிற்குப் பிறகு, முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களின் 2 […]
சூப்பரோ சூப்பர்..!! ஒரே நேரத்தில் 1,70,461 ஆசிரியர்களுக்கு பணி..!! மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!!

You May Like