fbpx

#Breaking..!! திராவிட இயக்க பேச்சாளர் நெடுஞ்செழியன் காலமானார்..!! தலைவர்கள் இரங்கல்..!!

தமிழறிஞரும் திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த தமிழறிஞரும் திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் காலமானார். பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த தமிழறிஞர் நெடுஞ்செழியன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

#Breaking..!! திராவிட இயக்க பேச்சாளர் நெடுஞ்செழியன் காலமானார்..!! தலைவர்கள் இரங்கல்..!!

ஆனால், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இதனைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த நெடுஞ்செழியன் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தினார். இறுதி சடங்கிற்காக தமிழறிஞர் நெடுஞ்செழியனின் உடல் அவரது சொந்த ஊரான திருச்சிக்கு எடுத்து செல்லப்படுகிறது. இவருக்கு திராவிட இயக்க உணர்வாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

சூப்பர் நியூஸ்...! 9,800-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்...! இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு…!

Fri Nov 4 , 2022
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Mail Motor Service Group A, Postal Services Group ‘B’, Assistant Superintendent of Posts, Mail Motor Service உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 9,800-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு […]

You May Like