fbpx

BREAKING | கூல்டிரிங்ஸ் குடித்து சிறுமி உயிரிழந்த விவகாரம்..!! தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்ய உத்தரவு..!!

திருவண்ணாமலை மாவட்டம் கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜ்குமார். இவரது 2-வது மகள் 5 வயதான காவ்யாஸ்ரீ, அங்குள்ள தொடக்க பள்ளியில் படித்து வந்துள்ளார். நேற்று காவ்யாஸ்ரீ, அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் 10 ரூபாய் குளிர்பானம் வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் சிறுமி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாய், மூக்கு வழியாக நுரை தள்ளி மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து, உடனடியாக சிறுமி மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள குளிர்பான ஆலைகள், கடைகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. காலாவதியான குளிர்பானங்கள் விற்கப்பட்டால் கடை, ஆலையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, செய்யாறு பகுதியில் உள்ள கடைகளில் குளிர்பான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Read More : பிரபல நடிகை செய்த காரியத்தால் வீட்டை விட்டு வெளியேறிய தந்தை..!! நளினி வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..?

English Summary

The Food Safety Department has ordered an inspection of soft drink factories and shops across Tamil Nadu.

Chella

Next Post

ஒரு ரயில் தயாரிக்க எவ்வளவு கோடி செலவாகும் தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல் இதோ..!!

Tue Aug 13 , 2024
Indian Railways has the largest railway network in the world.
மக்களே..!! ஒரு ரயில் தயாரிக்க எவ்வளவு கோடி செலவாகும் தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!!

You May Like