இந்தியன் 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க நடிகர் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
90-ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் படங்களில் ஒன்றாக தற்போது வரை இருக்கும் திரைப்படம் இந்தியன். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது.
இப்படத்தில் சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகவுள்ளதால் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியன் 2 படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு ரூ.150 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்தியன் 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க நடிகர் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் சங்கர், லைகா நிறுவனம் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ விளக்கம் அளிக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 12ஆம் தேதி இந்தியன் 2 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அதற்கு தடை கோரி ஆசான் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தான் நீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
Read More : இந்தியன் 2 திரைப்படம்..!! கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..? ரூ.150 கோடியா..? உண்மை என்ன..?