fbpx

Breaking | மேல்முறையீட்டு வழக்கில் ஓபிஎஸ்-க்கு எதிராக தீர்ப்பு..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சமீபத்தில் அதிமுக சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தனி நீதிபதி தடை விதித்தார். இந்த தடையை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்கில் ஓபிஎஸ்-க்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதாவது, அதிமுக பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை நீக்க முடியாது எனக்கூறி, ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Chella

Next Post

’அடுத்து ஜெயிலுக்கு செல்லப்போகும் 3 திமுக அமைச்சர்கள் இவர்கள் தான்’..!! அண்ணாமலை உறுதி..!!

Thu Jan 11 , 2024
சிறையில் இருந்து செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக சம்பளம் வாங்குகிறார் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ’என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், சங்க காலத்தில் இருந்து இன்று வரை சிறப்பு பெற்றுள்ள பகுதி. இப்பகுதியை சேர, சோழ மன்னர்கள் ஆண்டுள்ளனர். இங்கு, 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாதேஸ்வரன் மலை உள்ளது. குட்டி […]

You May Like