fbpx

#Breaking..!! ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக போட்டி இல்லை..!! டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பல்வேறு இடங்களில் இருந்து ஈரோட்டுக்கு வந்து உள்ளனர். தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அவர்கள் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு முறையில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த தேர்தலில் ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அமமுக அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கு தங்களின் குக்கர் சின்னம் கிடைக்காத காரணத்தினால் தேர்தலில் போட்டியிடவில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஏற்கனவே அவரது வேட்பாளர் சிவ பிரசாந்த் வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம், இடைத்தேர்தலில் ஒதுக்க இயலாது என கூறியுள்ளது. ஓராண்டில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், புதிய சின்னத்தில் போட்டியிட்டால் குழப்பம் ஏற்படும் என தினகரன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டிடுவதை தவிர்ப்பதே சரியானது என்ற நிர்வாகிகள் ஆலோசனைப்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

'வீடியோ' பார்க்கலாம் என்று ஆசை வார்த்தை! 11 ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!

Tue Feb 7 , 2023
தனது செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரை விழுப்புரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சமீப காலங்களில் மைனர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள்  அடுத்தடுத்து நடைபெற்ற வருவது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தற்போது தமிழகத்திலும் இது போன்ற சம்பவங்கள் தினமும் நடைபெற்று வருவது  வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த வெள்ளக்குளம் பகுதியைச் சார்ந்தவர் […]

You May Like