பாலிடெக்னிக் படிப்புகளுக்கு கவுன்சிலிங் கிடையாது என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு முடிவடைந்த பிறகு, மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்கொள்ளும் முக்கியமான கேள்வி என்னவென்றால், அடுத்து என்ன படிப்பது..? தான். ஒவ்வொருவருக்கும் விதவிதமான கனவுகள், விருப்பங்கள் இருக்கும். ஒரு சிலர் 11ஆம் வகுப்பு படிப்பார்கள், இன்னும் சிலர் தொழில்நுட்பக் கல்விக்கு செல்வார்கள். மேலும், சிலர் பாலிடெக்னிக் கல்லூரியை தேர்வு செய்வார்கள். அந்த வகையில், பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விருப்பமுள்ள மாணவர்களுக்கு தற்போது ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.
பாலிடெக்னிக் படிப்புகளுக்கு கவுன்சிலிங் கிடையாது என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதுவரை வந்த விண்ணப்பங்களை வைத்து Spot Admission செய்யவும், கலந்தாய்வு அல்லாமல் கல்லூரி அளவில் தரவரிசை தயார் செய்து நேரடி சேர்க்கை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இணையதளம் மூலமாக இதுவரை பதிவு செய்த மாணவர்களுக்கு சேர்க்கை ஒதுக்கீடு ஆணையை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.