நாம் தமிழர் கட்சிக்கு வேறு சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரும்பு விவசாயி சின்னம் பறிபோனதால், மாற்றுச் சின்னத்தை ஒதுக்குமாறு நாம் தமிழர் கட்சி கோரியிருந்தது.
இதனையடுத்து, அக்கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த சின்னத்திற்கு பதில் வேறு சின்னம் ஒதுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், அந்த கோரிக்கையை தற்போது தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டதால். ஆகையால், இனி இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி “மைக்” சின்னத்தில் தான் போட்டியிட முடியும்.