அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவை மூலம் நிரப்பப்படும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்ற இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்தவும், சட்டம் இயற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, என்.ஆர்.இளங்கோ, அருள்மொழி, லட்சுமி நாராயணன் ஆகிய வழக்கறிஞர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.