ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உட்பட 6 பேர் சிறையில் உள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி முதல் நளினி பரோல் விடுப்பில் வெளியே உள்ளார். இந்நிலையில் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேரறிவாளனை கடந்த மே மாதம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நளினி, ரவிச்சந்திரனின் மனுக்களை விசாரித்த நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, பேரறிவாளனை போலவே மற்றவர்களும் நிவாரணங்களை பெற தகுதியானவர்கள் என்று கூறி 6 பேரையும் விடுதலை செய்துள்ளது.
