fbpx

BREAKING | பிப்.27ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்..!! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, பிப்.8ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளதாகவும், பிப்.15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 27ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவும், அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்களுக்கும், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கத்தில் தலா 5 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

15 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை :

1. ஆந்திரா – 3

2. பீகார் – 6

3. சத்தீஸ்கர் – 1

4. குஜராத் – 4

5. ஹரியானா – 1

6. ஹிமாச்சல் பிரதேசம் – 1

7. கர்நாடகா – 4

8. மத்தியப்பிரதேசம் – 5

9. மகாராஷ்டிரா – 6

10. தெலங்கானா – 3

11. உத்தரப்பிரதேசம் – 10

12. உத்தரகாண்ட் – 1

13. மேற்கு வங்கம் – 5

14. ஒடிசா – 3

15. ராஜஸ்தான் – 3

Chella

Next Post

அதுக்குள்ள கமலுக்கு மத்திய அமைச்சர் பதவியா..? திமுக போடும் பக்கா பிளான்..!! குஷியில் மக்கள் நீதி மய்யம்..!!

Mon Jan 29 , 2024
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. மற்றொரு பக்கம் காங்கிரஸ் – திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கியுள்ளது. இந்த இந்திய கூட்டணியில் இணைந்து திமுக தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் லோக்சபா தேர்தலை சந்திக்க வாய்ப்புகள் உள்ளன. […]

You May Like