அதிமுக பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
இதனிடையே இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் என பலரும் ஓபிஎஸ்-ஐ துரோகி என்று, துரோகிகள் கட்சியில் இருக்கக் கூடாது என்றும் பேசினர்….
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.. இதையடுத்து ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கே.பி. முனுசாமி தெரிவித்தார்.. ஆனால் பொதுக்குழு மேடையிலேயே ஓபிஎஸ்-ஐ நீக்கும் தீர்மானம் குறித்து சி.வி. சண்முகம், கேபி முனுசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இருந்து இன்றே நீக்க வேண்டும் என்று கே.பி. முனுசாமியுடன் சி.வி. சண்முகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. இதனால் பொதுக்குழுவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..
இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் “ இந்த தீர்மானத்தை வாசித்தார்.. அந்த தீர்மானத்தில் “ திமுகவோடு நட்பு பாராட்டியது, திமுக ஆட்சியை பாராட்டுவது போன்ற கட்சிக்கு முரணான செயல்களில் ஓபிஎஸ் ஈடுபட்டு வந்தார்.. எனவே ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இருந்து நீக்க சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.. அதன்படி கட்சி பொருளாளர், கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. எனவே ஓ. பன்னீர்செல்வம், ஆர். வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகின்றனர்.. தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எந்த தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..