தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
➥ பயிர் வகை விதை தொகுப்பு ஒரு லட்சம் வீடுகளுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.
➥ மலர் விவசாயிகளின் மேம்பாட்டுக்கு ரூ.10.5 கோடி ஒதுக்கீடு.
➥ ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சிக்கு ரூ.35.26 கோடி ஒதுக்கீடு.
➥ வெங்காய சேமிப்பு கூடங்கள் அமைக்க ரூ.18 கோடி ஒதுக்கீடு.
➥ பாரம்பரிய காய்கறி இரகங்களின் சாகுபடியை 2,500 ஏக்கரில் மேற்கொள்ள ரூ. 2.4 கோடி ஒதுக்கப்படும்.
➥ நீர் ஆதாரத்தை திறம்பட பயன்படுத்துவதற்காக, மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.1,168 கோடி ஒதுக்கீடு
➥ விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் வாங்க மானியத் தொகை உயர்வு.
➥ 17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும்.
➥ சிறு,குறு விவசாயிகளின் பயனிற்காக 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ரூ.10.50 கோடியில் அமைக்கப்படும்.
➥ இ-வாடகை செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குவதை வலுப்படுத்த ரூ.17.37 கோடி ஒதுக்கீடு.