சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட ரிசர்வ் காவல்படை நடத்திய தேடுதல் வேட்டையில் 22 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு தனித்தனி மோதல்களில் மொத்தம் 22 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிஜாப்பூர் மற்றும் கான்கர் மாவட்டங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் ஜவானும் கொல்லப்பட்டார்.
கங்கலூரில் உள்ள பிஜாப்பூர்-தந்தேவாடா எல்லையில் அடர்ந்த காட்டுப் பகுதியில் 18 நக்சல்களும் ஒரு போலீஸ் ஜவானும் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் தொடங்கிய தேடுதல் நடவடிக்கையின் போது இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. இது கடுமையான துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்தது.
சம்பவ இடத்தில் இருந்து இரண்டு நக்சலைட்டுகளின் உடல்களும், துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார். அப்பகுதியில் இன்னும் நடவடிக்கை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
Read More : ’இனி ஆசிரியராக வேண்டுமென்றால் என்ன படிக்க வேண்டும்’..? புதிய அறிவிப்பை வெளியிட்ட உயர்கல்வித்துறை..!!