தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டப்படி தவறு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டது, பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனங்களில் குறுக்கீடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டப்படி தவறு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டது தவறான செயலாகும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்குமே பொருந்தும். யூனியன் பிரதேசங்களுக்கு மட்டும் பொருந்தாது என்று கூறப்படுகிறது.