விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, பொதுக்குழு உறுப்பினர்களுடன் விஜய் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய்க்கே முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்.
* இருமொழிக் கொள்கையில் உறுதி என தீர்மானம் நிறைவேற்றம்
* டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
* இலங்கை தமிழர் பிரச்சனைக்கு பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு.
* மாநில அரசுகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
* பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.
* சமூக நீதியை நிலைநிறுத்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
* வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்
* பன்னாட்டு அரங்கிற்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட வேண்டும்.
* நாடளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என தீர்மானம்.
* மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு; அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
* அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என தீர்மானம்.
Read More : தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டத்தில் காத்திருக்கும் கமகம விருந்து..!! என்ன ஸ்பெஷல் தெரியுமா..?