fbpx

BREAKING | மன்சூர் அலிகானுக்கு என்ன ஆச்சு..? மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே ‘தமிழ் தேசிய புலிகள்’ என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வந்தார். கடந்த கால தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார் மன்சூர் அலிகான். தற்போது அந்த கட்சியின் பெயரை ‘இந்திய ஜனநாயக புலிகள்’ என மாற்றி தேசிய அரசியலில் குதித்தார்.

மேலும் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், வேலூர் தொகுதியில் சுயேட்சை சின்னமான பலாப்பழ சின்னத்தில் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகான், தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென உடல்நலக்குறைவு காரணமாக குடியாத்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Read More : பத்திரப்பதிவு முடிந்த உடனேயே நீங்கள் நிலத்தின் உரிமையாளராக முடியுமா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Chella

Next Post

“நாட்டோட எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது!! நாளைய தலைமுறை காக்க I.N.D.I.A. கூட்டணிக்கு வாக்களிப்பீர்!” – ஸ்டாலின் வீடியோ

Wed Apr 17 , 2024
தமிழகத்தை வஞ்சித்த பாஜகவையும் தமிழகத்தை பாழ்படுத்திய அதிமுகவையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பிரச்சாரம் செய்துள்ளார். நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி தேதி தொடங்கி அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நாளை மறுநாள் 40 தொகுதிகளிலும் […]

You May Like