தமிழக சட்டப்பேரவையில் 2025 – 26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
➥ சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.
➥ வரும் நிதியாண்டில் 10,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்.
➥ மகளிர் உரிமைத்தொகை பெறாத பெண்கள், மீண்டும் விண்ணப்பிக்க உரிய வாய்ப்புகள் வழங்கப்படும்.
➥ மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது ஒரு கோடியே 6 லட்சம் குடும்ப தலைவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வருகின்றனர்.
➥ சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.