BREAKING | தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.
பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :
* சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கோவளம், பெசன்ட் நகர் கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.
* வடசென்னைக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு.
* பூந்தமல்லியில் ரூ.500 கோடியில் திரைப்பட நகரம்.
* வடசென்னையில் புதிய குடியிருப்புகள், திறன்மிகு பள்ளிகள், மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
* கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் 1 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்.
* இந்தாண்டு மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கீடு.