fbpx

BREAKING | வேட்புமனுவில் தவறான தகவல்..!! எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு..!!

வேட்புமனுவில் தகவலை மறைத்த புகார் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, எடப்பாடி தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், கல்வித் தகுதி, சொத்து விவரங்களை முழுமையாக தெரிவிக்காமல் மறைத்துள்ளார். எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் இதுவரை பெற்ற ஊதியத்தையும் திரும்ப பெற வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

தேனி உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, அவரது புகாரின் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில் தான், வேட்புமனுவில் தகவலை மறைத்த புகார் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி முழு ஒத்துழைப்பு தர வேண்டுமென்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்பு விதித்த இடைக்கால தடையை நீக்கியதோடு, விசாரணைக்கும் தற்போது உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Read More : தோசை மாவில் பூச்சிக்கொல்லி மருந்து..!! தாய், காதலி போட்ட ஸ்கெட்ச்..!! விசாரணையில் வெளிவந்த ஷாக்கிங் தகவல்..!!

English Summary

The High Court has said that it may investigate AIADMK General Secretary Edappadi Palaniswami regarding the complaint of concealing information in the nomination papers.

Chella

Next Post

அண்ணா நகரில் அதிரடி காட்டிய போலீஸ்..!! மசாஜ் சென்டரில் மஜாவாக நடந்த பாலியல் தொழில்..!! பெண் கைது..!!

Wed Jan 22 , 2025
A woman who was working as a sex worker at a massage center operating in Anna Nagar was arrested in a dramatic manner.

You May Like