fbpx

#Breakingnews..!! 72 நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி..!!

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி நாளை அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார்.

பொதுக்குழு தீர்ப்புக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நாளை எடப்பாடி பழனிசாமி செல்ல உள்ளதாக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நாளை (செப்.7) காலை 10 மணியளவில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

#Breakingnews..!! 72 நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி..!!

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்கத் தடை..! மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

Wed Sep 7 , 2022
டெல்லியில் வரும் ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை, உற்பத்தி மற்றும் வெடிக்கத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிகபட்சமாக டெல்லி மாநிலம் காற்று மாசுவால் திணறி வருகிறது. அங்கு கடந்த சில ஆண்டுகளாகவே காற்றின் தரம் மிக மிக மோசமான நிலையில், இருந்து வருகிறது. இதனால் டெல்லியில் கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி […]
தமிழகத்தில் தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு..!! வலுக்கும் கோரிக்கை

You May Like