பாலம் விபத்தில் ஒரேவா நிறுவனத்தின் மேலாளர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிபதியிடம் இந்த விபத்து கடவுளின் விருப்பம் என பதில் அளித்துள்ளது மக்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது.
குஜராத் மோர்பி பகுதியில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கும் பாலம் அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் 141 பேர் உயிரிழந்த நிலையில் 170 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாலத்தை பராமரித்த ’ஒரேவா’ என்ற நிறுவனத்தின் மலாளர் தீபக் பரேக், மற்றொரு மேலாளர், இரண்டு சப்கான்ட்ராக்டர், டிக்கெட் விற்பனையாளர் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.
அவர்களை நீதிமன்ற மஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தியபோது மேலாளர் தீபக் கூறுகையில், ’’ இந்த பால விபத்து கடவுளின் விருப்பம்’’ என தெரிவித்தார். இது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என குறிப்பிட்டார். இது அனைவரின் கோபத்தையும் தூண்டியுள்ளது. இதனிடையே போலீசார் முதற்கட்ட விசாரணையில் கம்பிகள் துருபிடித்திருந்தது. புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட நிறுவனம் கேபிளை மாற்றவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் நடக்கும் நடைபாலத்தை மட்டும் மாற்றிய நிறுவனம் கம்பிகளை மாற்றவில்லை என தெரியவந்துள்ளது. இதை சரி செய்து இருந்தால் இந்த விபத்தே நடந்திருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிறுவனத்தின் உரிமையாளர் விபத்து நடந்ததில் இருந்து மாயமாகி உள்ளார் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு கியாரண்டி வழங்கியுள்ள நிறுவனத்தின் இயக்குனர் ஜெய்சுக்பாய் படேலை போலீசார் இன்னும் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.