மத்தியப் பிரதேச மாநிலம் திகம்கர் மாவட்டத்தில் உள்ள லித்தோரா தால் கிராமத்தைச் சேர்ந்த தியான் சிங் கோஷ் (85) உயிரிழந்த நிலையில், இவருக்கு தாமோதர் சிங் மற்றும் கிஷன் சிங் என ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இறந்த தியான் சிங் கோஷ் தனது இளைய மகன் தாமோதர் சிங்கின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனால், தந்தையின் இறுதிச்சடங்குகளை அவர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.
தந்தை இறந்துவிட்டார் என்பதை அறிந்ததும், அவரது மூத்த மகன் கிஷன் தனது குடும்பத்தினருடன் தாமோதர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தனது தந்தையின் இறுதிச் சடங்குகளை தான் செய்வதாகவும், தனது தந்தை தனது மூத்த மகன் இறுதிச் சடங்குகளைச் செய்ய விரும்புவதாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது, கோபமடைந்த கிஷன், தனது தந்தையின் உடலை இரண்டாக வெட்டி தனித்தனியாக இறுதிச் சடங்குகளைச் செய்வதாகக் கூறினார். இதனைக் கேட்டு அவரது குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் அதிர்ச்சியடைந்தனர். வாக்குவாதம் முற்றிய பிறகு, அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளூர் போலீசார், கிஷனுக்கு அறிவுரை கூறி அவரை அமைதிப்படுத்தினர். பின்னர், இறுதிச் சடங்குகள் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் இளைய மகன் தாமோதர் சிங் செய்வார் என்று முடிவு செய்யப்பட்டது. பின்னர், தியானி சிங் கோஷின் இறுதிச் சடங்குகள் காவல்துறையின் மேற்பார்வையில் நடைபெற்றது.