fbpx

’அண்ணே என்ன மன்னிச்சிருங்க’..!! வீடியோவில் கதறி கதறி அழுத நடிகர் விஷால்..!!

விஜயகாந்த் மறைவை அடுத்து நடிகர் விஷால் கண்ணீர் விட்டு கதறி அழுது இரங்கல் தெரிவித்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரபலங்கள், திரையுலகினர், பொதுமக்கள் என அனைவரும் வரிசையாக விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் இருக்கும் நடிகர் விஷால், வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், அண்ணே.. என்னை மன்னித்துவிடுங்கள். இந்த நேரத்தில் நான் உங்கள் பக்கத்தில் இருந்து உங்கள் முகத்தை ஒருமுறை பார்த்து உங்கள் காலை தொட்டுக் கும்பிட்டிருக்க வேண்டும். நல்லது செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதிலும் எங்களைப் போன்ற ஆட்கள் நல்லது செய்வது சாதாரணம் அல்ல. உங்களிடமிருந்து அதை நான் கற்றுக் கொண்டேன். உங்கள் அலுவலகத்திற்கு யாராவது வந்தால் அவர்களுக்கு சோறு போட்டு அனுப்புவீர்கள்.

ஒரு அரசியல்வாதி, நடிகர் சங்க முன்னாள் நிர்வாகியோ என்பதை விட ஒரு நல்ல மனிதர் இறந்துவிட்டார் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு மனிதராக பேர் வாங்குவது சுலபம் அல்ல. சிலருக்கு மட்டுமே அந்த பேர் நீடிக்கும். என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணே. சத்தியமாக சொல்கிறேன். நான் உங்களுடன் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும். உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்” என கதறி அழுதுள்ளார் விஷால்.

Chella

Next Post

’இப்படி ஒரு காட்சியை எடுக்கவே தில்லு வேணும்’..!! வைரலாகும் 'ரமணா’ பட சீன்..!!

Thu Dec 28 , 2023
கேப்டன் விஜயகாந்த் இன்று காலை மரணமடைந்த நிலையில், அவரை பற்றிய பல தகவல்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்து வெளியான திரைப்படம் ‘ரமணா’. இந்த படத்தில், விஜயகாந்த் ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். அதேபோல் பிரபல பாலிவுட் நடிகை ஆஷிமா பாலா மற்றொரு நாயகியாக நடித்திருந்தார். 100 நாட்களுக்கு மேல் ஓடிய […]

You May Like