fbpx

அரசுப் பெண் ஊழியர் குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த சகோதரர்கள்..!! திடீரென கேட்ட அந்த சத்தம்..!! நடந்தது என்ன..?

அரசு பெண் ஊழியர் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த அண்ணன்-தம்பி 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காரங்காடு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவர், அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், இவர் வீட்டில் குளித்துக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் யாரோ செல்போனில் வீடியோ எடுத்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டுள்ளார்.

இதையடுத்து, உடனே அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுதொடர்பாக அந்த பெண் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன்- தம்பியான செல்லதுரை (33), சின்னத்துரை (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

தெருநாயால் தரையிறங்காமல் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே சென்ற விமானம்..!! எங்கு தெரியுமா..?

Wed Nov 15 , 2023
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UK881 என்ற விமானம் நேற்று மதியம் கோவாவில் உள்ள டபோலிம் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டது. அங்கு வந்தடைந்த விமானம், தரையிறங்கும் வேளையில், தெருநாய் ஒன்று ஓடுபாதையில் அலைந்து கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட விமானி, பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் பெங்களூரு விமான நிலையத்திற்கே திருப்பினார். இதையடுத்து, பெங்களூருவில் இருந்து மாலை 04:55 மணியளவில் விமானம் புறப்பட்டு, […]

You May Like