fbpx

நாய்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவிய புருசெல்லா கேனிஸ் நோய்!… குணப்படுத்தவே முடியாது! மரணம் தான் ஒரே தீர்வாம்!

பிரிட்டன் நாட்டில் நாய்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவிய புருசெல்லா கேனிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் குணப்படுத்தவே முடியாத மிக மோசமான நோய் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனாவின் கோரத்தாண்ட பாதிப்பில் இருந்து வெளியே வர மக்கள் இன்றளவும் முயற்சித்து வருகின்றனர். இதன்காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் முடங்கிப் போனது. இருப்பினும் அலை அலையாக வைரஸின் புதிய மாறுபாடுகள் என்ற பெயரில் கொரோனா மக்களை விட்டு போவதாக தெரிவதில்லை. இதன் பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், பிரிட்டன் நாட்டில் மற்றொரு கொடூரமான நோய் பரவியுள்ளது. புருசெல்லா கேனிஸ் என்ற கொடிய நோய் நாயில் இருந்து மனிதர்களுக்குப் பரவியுள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த 3 பேர் இந்த புருசெல்லா கேனிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயைக் குணப்படுத்தவே முடியாது என்பதே அதிர்ச்சிகரமான தகவல்.

முன்னதாக இந்த நோய் தாக்கம் நாய்களிடமே இருந்ததில்லை. இந்த சூழலில் திடீரென மனிதர்களுக்கும் பரவியிருக்கிறது. கடந்த 2020ஆம் ஆண்டு முதலே பிரிட்டன் நாட்டில் இருக்கும் நாய்களுக்கு மத்தியில் இதுபோன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், அது மனிதர்களுக்குப் பரவுவது இதுவே முதல்முறையாகும். புருசெல்லா கேனிஸ் என்ற இந்த பாதிப்பு கிழக்கு ஐரோப்பாவிலிருந்து இங்கிலாந்துக்குப் பரவியதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அசுத்தமான பொருட்களில் இருந்து இந்த புருசெல்லா கேனிஸ் பாதிப்பு வேகமாகப் பரவும். குறிப்பாக இனப்பெருக்கம் மற்றும் பிரசவம் சமயத்தில் நாய்களிடம் இருந்து வெளிப்படும் திசுக்கள் மற்றும் திரவங்கள் மூலம் இது பரவும் ஆபத்து மிக மிக அதிகம்.

நாய்களின் சிறுநீர், ரத்தம் மற்றும் உமிழ்நீர் போன்ற நாயின் உடல் திரவங்கள் மூலமும் புருசெல்லா கேனிஸ் பரவும். இந்த பாதிப்பு ஒரு முறை ஏற்பட்டாலும் அந்த நாய் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும். ஆண்டிமைக்ரோபியல் சிகிச்சை அளித்தாலும் கூட அவை முழுமையாகக் குணமடையாது. பெரும்பாலும் நாய்களுக்கு மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படும். மனிதர்களுக்கு மிக அரிதாகவே ஏற்படும். இந்தச் சூழலில் தான் இந்த பாதிப்பு அங்கே மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ளது. நாய்களுக்கு இந்த நோய் ஏற்படும் போது அதைக் குணப்படுத்தவே முடியாது. நாய் வாழ்நாள் முழுக்க இந்த நோயுடன் வாழ வேண்டும்.

அதன் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும். இதனால் இந்த பாதிப்பு ஏற்படும் நாய்களை கருணைக்கொலை செய்யப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மனிதர்களுக்கு ஏற்படும் இந்த பாதிப்பிற்குச் சிகிச்சை இருக்கிறது. இருப்பினும், அது நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. நாய்களுக்கு எந்தளவுக்குச் சிகிச்சை அளித்தாலும் வாழ்நாள் முழுக்க அதன் உடலில் இந்த பாக்டீரியா பாதிப்பு இருக்கும். இதனால் எப்போது வேண்டுமானாலும் அவை மனிதர்களுக்குப் பரவும் ஆபத்து இருக்கிறது. கருணை கொலை செய்தால் மட்டுமே பாக்டீரியா பாதிப்பைத் தடுத்து நிறுத்த முடியும். இதன் காரணமாகவே இந்த பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்ட நாய்களைக் கருணை கொலை செய்ய அந்நாட்டு அரசு பரிந்துரைக்கிறது.

Kokila

Next Post

காலிஸ்தானி பயங்கரவாதி கொலை விவகாரம்!… இந்தியாவிற்கு போகாதீர்கள்!… கனடா அரசு அறிவிப்பு!

Wed Sep 20 , 2023
காலிஸ்தான் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், கனடா – இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிப்பதாகக் கனடா பிரதமர் கூறியதால் பெரும் சர்ச்சையாகியுள்ளது. கனட பிரதமரின் இந்த கருத்துக்கு இந்தியா தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரு நாடுகளும் மாறி மாறி தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறது. இதற்கிடையே இந்த மோதலின் அடுத்த கட்டமாகக் கனடா […]

You May Like