வாயில் கம்பியை சொருகி கொடூரமான முறையில் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டம் மறையூரில் பழங்குடியின இளைஞர் ரமேஷ் (27) வாயில் கம்பி சொருகிய நிலையில் அவர் சடலமாக கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து பின்னர் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷ் உறவினர் சுரேஷ் என்பவருடன் சொத்துத் தகராறு ஏற்கனவே இருந்ததாக கூறப்படுகின்றது.
எனவே அந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது இதுவரை வெளியாகவில்லை. சுரேஷ் குடிபோதையில்இருந்ததாகவும் அப்போது தகராறின் போது வாயில் கம்பையை வைத்து சொருகிகொன்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கொலையை செய்த நபர் சுரேஷ் தலைமறைவாகிவிட்டார். தலைமறைவாக இருந்த அவர் காட்டுப்பகுதியில் போலீசாரிடம் பிடிபட்டதாக கூறப்படுகின்றது. அவரிடம் கொலை குறித்து விசாரித்து வருவதாகவும் விரைவில் அவர் எதற்காக கொன்றார் உண்மையிலேயே சொத்துதகராறு காரணமா என்பதையும் அறிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.