fbpx

அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட BSNL..!! இனி சிம் கார்டே தேவையில்லை..!! வருகிறது eSIM..!!

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரித்ததை தொடர்ந்து பலரும் அரசு நிறுவனமான BSNL-க்கு மாறின. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட BSNL-இல் குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்கப்படுகிறது. கடந்த 4 மாதங்களில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5.5 மில்லியனாக அதிகரித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் 1 லட்சம் 4G டவர்களை நிறுவுவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், எக்ஸ் தளத்தில் நடைபெற்ற AskBSNL நிகழ்வில் பயனர் ஒருவர், தமிழ்நாட்டில் எப்போது பிஎஸ்என்எல் E-Sim அறிமுகப்படுத்தப்படும் என கேட்டார். அதற்கு 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் eSIM சேவை கிடைக்கும் என பிஎஸ்என்எல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

eSIM என்றால் எம்பெடட் சிம் என பொருள் ஆகும். நாம் தற்போது பயன்படுத்தும் நானோ சிம் போல் இல்லாமல் இந்த eSIM செல்போனின் மதர்போர்டிலேயே பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிம்மை அகற்றவே முடியாது. இதன் மூலம் சிம் கார்டை குளோனிங் செய்வது சிம் திருட்டு போன்ற மோசடிகளை தவிர்க்கலாம். இந்த eSIM மூலம் ஒரே ஸ்மார்ட்ஃபோனில் ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் ஃபோன் எண்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த சிம்மை 5 நிமிடங்களில் ஆக்டிவேட் செய்துவிட முடியும். ஆனால், இந்த eSIM பயன்படுத்துவதில் சில குறைபாடுகள் இருக்கின்றன. போன் ரிப்பேர் ஆகி விட்டால் சிம் கார்டை வேறு போனுக்கு மாற்றுவது போல், இதில் மாற்றம் செய்ய முடியாது. பெரும்பாலான செல்போன்களில் தற்போது eSIM பயன்படுத்தும் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ”விஜய் அப்படி சொல்லியிருக்காரு”..!! ”ஆனா, இங்க அப்படி இல்ல”..!! பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கும் தவெக பெண் நிர்வாகி..!!

English Summary

BSNL Director has said that eSIM service will be available in March 2025.

Chella

Next Post

இந்திய கிரிக்கெட்டர் வினோத் காம்ப்லி மருத்துவமனையில் அனுமதி.. நாளுக்கு நாள் மோசமாகும் உடல்நிலை..!!

Mon Dec 23 , 2024
Vinod Kambli's health deteriorates, admitted to Thane's Pragati hospital

You May Like