fbpx

பட்ஜெட் 2024!… எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து மிக முக்கிய அறிவிப்புகள்!… என்னென்ன தெரியுமா?

இந்தியாவில் சமீப ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகன செக்டார் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றன இதனால் இந்த பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த மிக முக்கியமான அறிவிப்புகள் எல்லாம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனையை அதிகரிக்கவும் பசுமையான எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களின் தயாரிப்பை அதிகரிக்கவும் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆட்டோமொபைல் செக்மென்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் அதிக அளவிலான பட்ஜெட்டை பெறும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக மத்திய அரசு ஃபேம் என்ற மானியத்தை வழங்கி வந்தது. 72 சதவீதமான பட்ஜெட் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. மொத்தம் ஒதுக்கப்பட்ட ரூ 2000 கோடி பட்ஜெட்டில் ரூ 1600 கோடி எலெக்ட்ரிக் டூவீலர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பதில் மிகப்பெரிய சவால்கள் இருந்தன. அதற்கான கட்டுமானத்தை கொண்டு வருவது பெரும் சிக்கலாக இருந்து வந்தது.

அதே நேரத்தில் இந்த ஃபேம் மானியம் மூலம் பொது போக்குவரத்தில் ஏற்ற வாகனங்களின் வருகை அதிகரித்தது. பல மாநிலங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை பொது போக்குவரத்து வாகனமாக பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த ஃபேம் மானியத்தை மீண்டும் தொடர இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிவிப்புகளை பொறுத்து எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அடுத்ததாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி என்பது அதிகமாக இருக்கிறது எனவும் அதை குறைக்க வேண்டும் எனவும் எெலக்ட்ரிக் வாகனங்களில் விற்பனையை அதிகரிக்க இது உதவும் எனவும் நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. இது குறித்து அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசு குறையும். இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

குறிப்பாக சிறிய ரக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி மிகப் பெரிய அளவில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்களால் வாங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இந்த பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உரிமம் வழங்குதல் பாதுகாப்பு அம்சங்கள் அதற்கான இன்சூரன்ஸ் குறித்த தமிழக அரசின் பாலிசி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக இந்தியாவிலேயே பேட்டரிகளை தயாரிக்க பேட்டரி தயாரிப்பு ஆலைகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் சில அறிவிப்புகள் இடம் பெறும் எனவும் எதிர்பார்க்கலாம்.

Kokila

Next Post

வங்கி வாடிக்கையாளர்களே பிளான் பண்ணிக்கோங்க..!! பிப்ரவரியில் 11 நாட்கள் விடுமுறை..!!

Tue Jan 30 , 2024
2024 பிப்ரவரி மாதத்தில் நாடு முழுவதிலும் உள்ள வங்கிகள் சில நாட்கள் மூடப்பட்டிருக்கும். வங்கிகளின் மாதந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது பிப்ரவரி மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரியில் மொத்தம் 11 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். பிப்ரவரி 11 நாட்கள் விடுமுறை நாட்களில் அனைத்து ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். […]

You May Like