நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட் இதுவாகும். வேறு எந்தவொரு நிதியமைச்சரும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை. மத்தியில் பாஜக 3-வது முறையாக ஆட்சியமைத்தப் பின் தாக்கல் செய்த இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட் அறிவிப்புகள்
➦ யூரியா உற்பத்தியை அதிகரிக்க அசாம் மாநிலத்தில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும்.
➦ பருத்தி உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்; சிறந்த வகை பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம்.
➦ புத்தாக்க நிறுவனங்களுக்கு கடன் வட்டியில் சலுகைகள் அறிவிப்பு
➦ கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும்.
➦ கிசான் கிரெடிட் கார்டு மூலம் 7.5 கோடி விவசாயிகளுக்கு குறுகியகால கடன் பெற நடவடிக்கை.
➦ கிசான் கடன் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்க வசதி.
➦ முதல்முறை தொழில் தொடங்கும் பட்டியலின பெண்களுக்கு சிறப்பு திட்டம்.
➦ பட்டியலின பெண்கள் சுயதொழில் மூலம் முன்னேற ரூ.2 கோடி வரை கடன் வழங்க சிறப்பு திட்டம்.