தமிழ்நாட்டின் பொது பட்ஜெட், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், இதுவரை 4 வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டு பல திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும் 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.
வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்
➥ இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.12 கோடியில் திட்டம்.
➥ மலைவாழ் உழவர் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.22.80 கோடி ஒதுக்கீடு.
➥ கரும்பு விவசாயிகளுக்கு 841 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
➥ 1000 வேளாண் பட்டதாரிகள் மற்றும் வேளாண் பட்டயதாரர்கள் மூலம் “முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்” அமைக்கப்படும்.
➥ அதிக விளைச்சலை காட்டும் முதல் 3 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்படும்.
➥ பட்டியலின விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் 60 முதல் 70%ஆக உயர்த்தப்படும்.