fbpx

பரபரப்பு: “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் குளறுபடி”.? அமைச்சர் மீது புகார்.! மாடுபிடி வீரர் குற்றச்சாட்டு.!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு இன்று மாலை 6:30 மணியுடன் முடிவடைந்தது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கருப்பையூரணியை சேர்ந்த கார்த்திக்கு என்ற வீரர் முதலிடம் பிடித்து முதலு அமைச்சர் ஸ்டாலின் பரிசாக வழங்கிய காரை தட்டி சென்றார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை தொடங்கியது. விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்க ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1200 காளைகளும் 700 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். பத்து சுற்றுக்களாக நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை அடக்கிய கார்த்திக் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

இவரைத் தொடர்ந்து 17 காளைகளை அடக்கிய அபி சித்தர் என்பவர் இரண்டாம் இடம் பெற்றார். எனினும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மோசடி நடைபெற்றதாக இரண்டாம் இடம் பெற்ற அபிஷித்தார் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். 6 மணிக்கு முடிவதாக அறிவிக்கப்பட்ட போட்டிகள் 6:30 மணி வரை நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த அவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

அதிக காளைகளை நான்தான் பிடித்ததாக கூறிய அபிசித்தர் தன்னை சிறந்த வீரராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தனக்கு கார் பரிசு வேண்டாம் என்றும் தன்னை முதலிடம் பிடித்த வீரராக அறிவித்தால் போதும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக அமைச்சரின் மீது புகார் அளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

ஊரக வளர்ச்சித் துறையில் சூப்பரான வேலை வாய்ப்பு.! "8-ஆம் வகுப்பு படிச்சிருந்தா போதும்" ₹.61,000/- வரை சம்பளம்.! தாமதிக்காமல் அப்ளை பண்ணுங்க.!

Wed Jan 17 , 2024
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தர்மபுரி ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அரசு அலுவலக உதவியாளர் பணி மற்றும் ஓட்டுநர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தர்மபுரி ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு 2 காலியிடங்களும் ஓட்டுநர் பணிக்கு 1 […]

You May Like