fbpx

முழு கொள்ளளவை எட்டிய பூண்டி ஏரி!… 45,000 கன அடி உபரி நீர் திறப்பு!… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கனமழை காரணமாக பூண்டி நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 45 ஆயிரம் கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மிக்ஜாம் புயல் இன்று தீவிர புயலாக கரையை கடக்கவுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் தொடர்ந்து நிரம்பி வருகிறது. இங்குள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் 3,458 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மழைநீர் மற்றும் வரத்துக் கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர் என நீர்வரத்து தற்போது 40 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் நீர்தேக்கத்தின் மொத்த உயரமான 35 அடியில், தற்போது 34 அடி ஆகவும், மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 2,976 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பூண்டி நீர்த்தேக்கம் தனது முழு கொள்ளளவை எட்டியதால், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் உத்தரவின் பேரில் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 45,000 கன அடி உபரி நீரானது கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியும் முழு கொள்ளளவை எட்டியது. கனமழை பெய்து வருவதால் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், 22 அடி தண்ணீர் இருந்தது. கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில், தற்போது 3050 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 12,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஏரியில் இருந்து தற்போது 8,000 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

Kokila

Next Post

Woww..! தமிழக அரசு அரசு கொடுக்கும் 4 ஆண்டு கல்வி உதவித்தொகை...! விண்ணப்பிக்க தவறவிடாதீர்கள்...!

Tue Dec 5 , 2023
தமிழகத்தில் கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் இந்த தேர்வு எழுதி தகுதி பெற்றவா்கள். இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவா்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இந்த தேர்வை ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு […]

You May Like