குஜராத்தில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை, விவசாயி ஒருவர் உயிருடன் மீட்டுள்ளார்.
குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள கம்போய் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த கிராமத்தில் விவசாயி வேலை செய்து கொண்டிருந்த போது குழந்தையின் அழுகுரலை கேட்டதை வைத்து குழந்தை புகைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்துள்ளார்.. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது குழந்தை உயிருடன் இருந்துள்ளது.. உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து அழுது கொண்டிருந்த குழந்தையை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
குழந்தை புதைக்கப்பட்டதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவரின் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே தங்களுக்கு தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் பெற்றோரை தேடி வந்தனர். அவரது பெற்றோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி குற்றம்) கீழ் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.