தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதுவும் இந்தாண்டு கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக ஏசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அந்த வகையில், புதிய ஏசி வாங்க நினைப்பவர்கள் சில முக்கிய அம்சங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
சரியான மின்சார இணைப்பு
ஏசியை பாதுகாப்பாக இயக்க வேண்டுமென்றால், உங்கள் வீட்டில் உயர் மின்னழுத்த வயரிங் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், அதிக வெப்பத்தின் காரணமாக வயர் இணைப்புகளில் பாதிப்பு அல்லது தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உங்கள் வீட்டில் ஏசியை பொருத்தும் முன், குறைந்தது 2KW மின்சார இணைப்பு இருக்கிறதா..? என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், மின்வாரியத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சரியான ஏசி தேர்வு செய்வது எப்படி..?
ஏசி வாங்கும் முன் உங்கள் அறையின் அளவை தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் அறை சிறியது என்றால் 1 டன் ஏசியே போதுமானது. பெரிய அறை என்றால் 1.5 டன் முதல் 2 டன் வரையிலான ஏசி தேவைப்படும். மேலும், உங்கள் அறையில் விண்டோ ஏசி பொருத்த இடமில்லை என்றால், ஸ்பிலிட் ஏசி மட்டுமே சரியாக இருக்கும். அதற்காக பால்கனி அல்லது முறையான காற்றோட்ட வசதி உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்வெர்டர் ஏசிகள் மின்சாரத்தை அதிகம் சேமிக்கும். தொடர்ச்சியாக ஏசியை பயன்படுத்த போகிறீர்கள் என்றால், இன்வெர்டர் ஏசி சிறந்த தேர்வாக இருக்கும். மேலும், ஏசி தேர்வு செய்யும்போது உங்கள் பட்ஜெட் முக்கியமானதாகும். மின்சார கட்டணத்தை குறைக்க விரும்பினால், 5 ஸ்டார் ஏசி வாங்கலாம். இது குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும். மேலும், ஏசி வாங்கும்போது, அதிக வருட உத்தரவாதம் மற்றும் ஏசி பிராண்டின் சேவை மையங்கள் அருகில் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
பிஇஎல் (BEE) ஸ்டார் ரேட்டிங், ஐஎஸ்ஐ (ISI) சான்றிதழ் பெற்ற ஏசிகளை வாங்குவது, பாதுகாப்பான மற்றும் நீண்ட ஆயுளுக்கு உதவும். நீண்ட கால செயல்பாடுக்கு தவறாமல் பராமரிப்பு செய்ய வேண்டும். ஏசி பொருத்துவது முதல் படி மட்டுமே. அதை நீண்ட காலம் பயன்படுத்த, சர்வீஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால், கம்ப்ரசர் அதிக வேலைப்பளு அடைந்து கொண்டுபோவது, அதிக வெப்பத்தினால் பாதிப்பு ஏற்படுவது மற்றும் ஏசியின் ஆயுட்காலம் குறையும். சர்வீஸ் செய்ய செலவாகும் என பார்த்தால், பின்னாளில் அது ஆபத்தை விளைவிக்கும். எனவே, இதனை கருத்தில் கொண்டு ஏசி வாங்கும் முன் முறையாக ஆய்வு செய்து, தேர்வை செய்ய வேண்டும்.
Read More : பக்தர்கள் கவனத்திற்கு..!! மருதமலை கோயிலுக்கு மலைப்பாதை வழியாக காரில் செல்ல தடை விதிப்பு..!!