fbpx

தகன மேடையில் எரிந்த பெண்ணின் சடலம்..!! இறைச்சியை பங்கு போட்டு சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் பரிபாடா பகுதியைச் சேர்ந்த மதுஸ்மிதா என்ற இளம்பெண் கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக இவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பின்னர் அவரின் உடல் அவரின் சொந்த கிராமத்துக்கு இறுதி மரியாதைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. பின்னர் இறுதிச்சடங்குகள் முடிந்ததும், எரியூட்ட தகன மைதானத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

பின்னர் கிராம மக்கள் சூழ அந்த இளம்பெண்ணின் சடலம் எரியூட்டப்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த இருவர் திடீரென எரிந்து கொண்டிருந்த அந்த பெண்ணின் சடலத்தை 3 பங்காகப் பிரித்து, இரண்டு பங்குகளை மீண்டும் தீயிலேயே வீசிவிட்டு, ஒரு பாகத்தை இருவரும் உண்டுள்ளனர். இந்த செயலால் அதிர்ந்த அங்கிருந்த கிராமத்தினர், அவர்களை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

அவர்கள் பெயர் சுந்தர் மோகன் சிங் (58), நரேந்திர சிங் (25) என்பது தெரியவந்தது. மேலும், இருவரில் சுந்தர் மோகன் சிங் சூனியம் செய்பவர் என்றும், திருமணமாகாத ஒரு பெண்ணின் இறைச்சியை உட்கொண்டால் அதிக சக்தி கிடைக்கும் என கருத்தியதால் இதனை செய்தோம் என்றும் அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

விண்ணில் ஏவப்படும் சந்திரயான்-3..!! மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!! என்ன காரணம் தெரியுமா..?

Fri Jul 14 , 2023
இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளதால் கடலுக்குச் செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த விண்கலத்திற்கான அனைத்து பரிசோதனைகளும், சோதனை ஓட்டங்களும் முடிவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் முடிவடைந்துள்ளன. சந்திரயான் 3 விண்கலத்தை சுமந்து செல்லும் எல்விஎம்3எம்4 விண்கலத்தை விண்ணில் […]

You May Like