fbpx

வாவ்…! 5 வயது வரை குழந்தைகளுக்கு பேருந்து கட்டணம் இலவசம்…! இவர்களுக்கு அரை டிக்கெட்…

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசப் பயணம். இதுவரை, மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே இது அனுமதிக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 5 வயதாக உயர்த்தப்பட்டது.

திருத்தப்பட்ட விதிமுறையானது SETC, MTC மற்றும் TNSTCயின் ஆறு மாநகராட்சிகளில் (கோவை, சேலம், மதுரை, விழுப்புரம், கும்பகோணம் மற்றும் திருநெல்வேலி) பொருந்தும். எட்டு போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப்படும் 19,500 பேருந்துகளிலும் இது பொருந்தும். ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளை இலவசமாக பயணம் செய்ய ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அனுமதிக்க வேண்டும். 5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமிருந்து 50% டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது அரை டிக்கெட் மட்டுமே எடுத்தால் போதுமான. 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் முழு கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டும்.

தற்போது, எத்தனை குழந்தைகள் அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. “சாதாரண பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு, அவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட, விலையில்லா டிக்கெட் வழங்கப்படுகிறது, மேலும் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை, அரசு ஈடு செய்கிறது. இலவசப் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு, டிக்கெட் எதுவும் வழங்கப்படாது. மீறி கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் "Silent Heart Attack"..! காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன..!

Sat May 11 , 2024
Silent Heart Attack : அறிகுறிகள் இல்லாமல் கூட மாரடைப்பு ஏற்படலாம். இது சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்று அழைக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பரிசோதனைகள் செய்யும் போது மக்கள் இதைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். சைலண்ட் ஹார்ட் அட்டாக் எவ்வளவு ஆபத்தானது மற்றும் அதன் அறிகுறிகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். அமைதியான மாரடைப்பை அடையாளம் காண்பது கடினம். ஏனென்றால், அமைதியான மாரடைப்பு ஏற்படும் போது, ​​உடலில் எந்த […]

You May Like