புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட கருக்கங்குடி வளத்தாமங்கலம் பகுதியை இணைத்து பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக காரைக்கால் முதல் கும்பகோணம் வரையில் செல்லும் தமிழக அரச பேருந்து சுரக்குடி, கருக்கங்குடி, வளத்தாமங்கலம் பகுதிகளை இணைக்கும் வழியாக பேருந்து சேவை தொடங்கப்பட்டது.இதனை தொடர்ந்து அந்த பேருந்து சேவை கருக்கங்குடி பகுதியில் இருந்து தொடங்கப்பட்டது. இந்த பேருந்து சேவையை புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரப்பிரியங்கா, தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் பிஆர் சிவா, மாவட்ட ஆட்சித்தலைவர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் கொடியை சேர்த்து தொடங்கி வைத்தனர்.
இதனையடுத்து அமைச்சர் சட்டப்பேரவை உறுப்பினர் மாவட்ட ஆட்சித் தலைவர் சொல்லிட்டார் பேருந்தில் ஏறி பயணம் செய்தனர். இந்த பயணத்தின் போது அமைச்சர் பயண சீட்டு வாங்கி பயணம் செய்தார். அப்போது தமிழக பேருந்தில் ஆய்வா? என்று ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு நாங்கள் அனைத்து பேருந்திலும் பயணம் செய்வோம் எனவும் அப்போது தான் நம்முடைய மாநில பேருந்து இருக்கு என்ன தேவைகள் இருக்கிறது பேருந்தில் என்ன குறைகள் இருக்கிறது என்று தெரியவரும் என அமைச்சர் கூறினார்.