fbpx

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வருங்கால மாப்பிள்ளை திடீர் மரணம்..!! சோகத்தில் குடும்பத்தினர்..!!

சேகர் ரெட்டி மகளுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை, திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி. இவரது மகன் சந்திரமவுலி ரெட்டி (வயது 27). இவருக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு – புதுச்சேரி மாநில ஆலோசனைக்குழு தலைவரும், தொழில் அதிபருமான சேகர் ரெட்டியின் மகளுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் 2023 ஜனவரி 26ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருந்ததும், இதனை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நடத்தி வைப்பதாகவும் இருந்தது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக சந்திரமவுலி ரெட்டி தனது திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று கொடுத்து வந்தார். இந்நிலையில், புதுமாப்பிள்ளை சந்திரமவுலி ரெட்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வருங்கால மாப்பிள்ளை திடீர் மரணம்..!! சோகத்தில் குடும்பத்தினர்..!!

இதற்கிடையே, காவேரி மருத்துவமனை தரப்பில் இருந்து மருத்துவக்குறிப்பு ஒன்று வெளியானது. அதில், கடந்த 18ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சந்திரமவுலி ரெட்டி, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சி.பி.ஆர். பரிசோதனைகள் முடிந்த நிலையில், அவர் கேத் லேப் பிரிவில் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு ‘எக்மோ’ சிகிச்சை அளிக்கப்பட்டு, இதய தமனியில் ‘ஸ்டண்ட்’ கருவி பொருத்தப்பட்டது. உடல் உறுப்புகள் செயலிழந்து வரும் நிலையில் அவர் கவலைக்கிடமாக இருக்கிறார்” என அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Chella

Next Post

செம ’ட்விஸ்ட்’ வைத்த தேர்தல் ஆணையம்..!! அதிமுக இனி எடப்பாடி கையில்..!! ஓபிஎஸ் கதை அவ்ளோதானா..?

Wed Dec 21 , 2022
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்காமல் இருந்து வரும் சூழலில், அதிமுகவின் வரவு – செலவு குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த 29.09.2022 தேதியிட்ட, 03.10.2022 அன்று தாக்கல் செய்யப்பட்ட, “Audited Annual Accounts FY 2021-22”, தேர்தல் ஆணைய பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக கையெழுத்திட்டு, இதை […]
’யாரை கேட்டு இப்படி பண்ணீங்க’..!! ஓபிஎஸ்-க்கு நோட்டீஸ் அனுப்பிய எடப்பாடி..!! பரபரக்கும் அதிமுக..!!

You May Like