நாடாளுமன்ற தேர்தலின் போது பறக்கும் படையினர் என்னதான் விழிப்புணர்வுடன் இருந்தாலும் கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடா நடைபெற்றது என்றும் கடைசி நேரத்தில் ஆளும் கட்சிக்கு பல தொழில் அதிபர்கள் பணத்தை வாரி இறைத்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தியை கேள்விப்பட்ட கமலாலய தரப்பு ஆளுங்கட்சிக்கு யார் யார் பணம் கொடுத்தார்கள் என்ற பட்டியல் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைத்த பிறகு அவர்களுக்கு குடைச்சல் கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், ஆளும் தரப்பு இதற்கெல்லாம் அசர போவதில்லை என்றும் இந்த தேர்தலில் பாஜகவுக்கு பணம் கொடுத்த தொழிலதிபர்கள் யார் யார் என்ற பட்டியலை எடுத்து வருவதாகவும் தங்களுக்கு குடைச்சல் கொடுத்தால் பதில் குடைச்சல் கொடுக்க ஆளும் தரப்பும் தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. மொத்தத்தில் தேர்தல் முடிந்தாலும் 2 கட்சிகளுக்கு இடையே உள்ள போட்டி மட்டும் முடியவில்லை என்று கூறப்படுகிறது.
Read More : குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஜங்க் ஃபுட்..!! இவ்வளவு ஆபத்தா..? பெற்றோர்களே உஷார்..!!