fbpx

தவெக ரகசியங்களை திமுகவுக்கு போட்டுக் கொடுக்கும் புஸ்ஸி ஆனந்த்..!! விரைவில் புதிய பொதுச்செயலாளர்..!! விஜய் அதிரடி..!!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதாவது, மாவட்ட கட்டமைப்பை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய பொதுச்செயலாளர் ஆனந்துக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்காக மாவட்ட அளவிற்கு நிர்வாகிகள் சோதனை செய்யப்பட வேண்டும். டிசம்பர் மாதத்திற்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டுமென விஜய் அறிவுத்தியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்யவும், ஒவ்வொரு மாவட்டத்தில் கட்சி நிலை, அதில் உள்ள நிர்வாகிகளின் நிறை, குறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

முதற்கட்டமாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆய்வு பணிகளை கண்காணிக்க வேண்டும். மாநிலம் முழுக்க எல்லா ஏரியாவிற்கும் செல்லுங்கள் என்று விஜய் உத்தரவு போட்டுள்ளார். இது போக தவெக தலைமையில் எடுக்கும் முடிவுகள், அரங்கக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் விவரங்கள் திமுக தலைமைக்கு போய்ச்சேர்ந்து விடுகிறது. மாநில உளவுத்துறைதான் இந்த ரிப்போர்ட்டை முதல்வருக்கு அனுப்பி வைக்கிறது.

ஆக, கட்சியின் ரகசிய முடிவுகள், விவாதிக்கப்படும் தகவல்கள் உளவுத்துறைக்கு எப்படி செல்கிறது? என்கிற சந்தேகம் விஜய்க்கு வந்துள்ளதாம். ஏனென்றால், விஜய் மற்றும் முக்கிய நபர்கள் 3 பேர் மட்டுமே இருக்கும் ஒரு சந்திப்பில் பேசப்பட்ட தகவல், அந்த சந்திப்பு முடிந்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் திமுகவில் இருக்கும் விஜய்யின் நண்பர் ஒருவர், விஜய்யிடம் இது குறித்து கேட்டபோதுதான் விஜய் அதிர்ச்சியடைந்திருக்கிறார். அதனால்தான், ரகசிய தகவல்கள் லீக் ஆகிறது என்கிற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இது பற்றி ஆய்வு செய்த போது, நீண்ட வருடங்களாக ரசிகர் மன்றத்தையும் விஜய்யையும் ஆக்ரமித்துக்கொண்டு, தற்போது கட்சியின் பெரிய பொறுப்பில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் தான் உளவுத்துறையிடம் நெருக்கமாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டார் விஜய். இதையடுத்து, அவரிடம் கோபம் காட்டாமல், அமைதியாக இருந்த விஜய் தற்போது பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மட்டும் கட்சியின் பொதுச்செயலாளராக அவர் பணி செய்யட்டும் என்கிற முடிவை எடுத்துள்ளாராம். ஆனந்தின் பதவி, பாண்டிச்சேரி என்கிற அளவில் சுருக்கப்படும் போது தமிழ்நாட்டு அரசியலை கவனிக்க மற்றொரு பொதுச்செயலாளரை நியமிக்கவும் ஆலோசித்துள்ளார் விஜய். ஆக, தமிழக வெற்றிக் கழகம் விரைவில் இரண்டு பொதுச்செயலாளர்களை பார்க்கப்போகிறது.

Read More : பெண்களே இனி இந்த ஆடைகளை அணியாதீங்க..!! என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா..?

English Summary

Tamil Nadu Vetri Kazhagam president Vijay has issued an important order to party officials.

Chella

Next Post

இந்த பிசினஸ் செய்தால் லட்சங்களை சம்பாதிக்கலாம்..!! மத்திய அரசின் மானியமும் உண்டு..!! எப்படி விண்ணப்பிப்பது..?

Sat Nov 9 , 2024
குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்று நினைத்தால், இந்த சோலார் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சோலார் பேனல் உற்பத்தி வணிகம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் வணிகங்களில் ஒன்றாகும். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 50% வளர்ந்துள்ளது. சூரிய ஆற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும் மற்றும் புதைபடிவ எரிபொருட்களைப் போல தீர்ந்துவிடாது. இது சுற்றுச்சூழல் நட்பு மட்டுமல்ல, சந்தேகத்திற்கு இடமின்றி செலவு குறைந்ததாகும். எனவே, […]

You May Like