fbpx

அதிகரிக்கும் தண்ணீர் பற்றாக்குறை.. ஆபத்தான நிலையில் 5 நகரங்கள்.. சென்னையும் லிஸ்டுல இருக்கு..

தென்மேற்கு பருவமழை இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. செப்டம்பர் 17ம் தேதி நிலவரப்படி, எட்டு மாநிலங்கள் மழைப்பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளன. இந்த மாநிலங்களில் பஞ்சாப், டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், திரிபுரா, மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகியவை அடங்கும். தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை நான்கு மாதங்கள் நீடிக்கும். இந்தக் காலக்கட்டத்தில் ஆண்டுக்கு 70 சதவீதத்திற்கும் அதிகமான மழை நாடு முழுவதும் பதிவாகிறது..

9 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கும் கனமழை..! எங்கெங்கு தெரியுமா?

இந்தியா முழுவதும் நீர் இருப்பு, பொருளாதாரம் மற்றும் பயிர்களுக்கு பருவமழை மிகவும் அவசியம். இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள், அதாவது தங்களின் பயிர்களை விளைவிக்க நிலத்தடி நீர் மற்றும் பருவமழையை நம்பி உள்ளனர்.. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாகி வருவதாக நிதி ஆயோக் ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை அறிக்கையை வெளியிட்டது..

இந்தியா வரலாறு காணாத மிக மோசமான தண்ணீர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது.. மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

தற்போது, ​​600 மில்லியன் இந்தியர்கள் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர், மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார்2 லட்சம் பேர் பாதுகாப்பான தண்ணீர் கிடைக்காததால் இறக்கின்றனர். இந்த நெருக்கடி இன்னும் மோசமாகப் போகிறது.. ஆம்.. 2030க்குள், நாட்டின் தண்ணீர் தேவை இரு மடங்காக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான மக்களுக்கு கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 6% இழப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது என்று அறிக்கை மேலும் கூறியது.

இந்தியாவில் உள்ள மொத்த குடிமக்களில் 12 சதவீதம் பேர் ஏற்கனவே ‘டே ஜீரோ’ சூழ்நிலையில் வாழ்கின்றனர், ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் இருக்கின்றனர்.. அதிகப்படியான நிலத்தடி நீர் உறிஞ்சுதல், திறமையற்ற நீர் மேலாண்மை அமைப்பு மற்றும் பற்றாக்குறை மழை ஆகியவற்றின் விளைவாக இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் நீர் தேவைகள் மற்றும் விநியோகம் மற்றும் வளங்கள் குறைந்து வருவதால், நாடு மிகப்பெரிய நீர் பற்றாக்குறையில் இருப்பதை தவிர்க்க முடியாது. ஆனால், மிகவும் ஆபத்தான இடத்தில் உள்ள இடங்கள் எவை தெரியுமா? விரிவாக பார்க்கலாம்..

பெங்களூரு : இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூருவின் நீர் பற்றாக்குறை என்பது நீண்ட காலமாக விவாதப் பொருளாக இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு, கர்நாடக அரசு தனது பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டது.. அதில்,, அடுத்த பத்து ஆண்டுகளில் பெங்களூரு தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும் என்று சுட்டிக்காட்டியது, மீண்டும் விவாதத்தைத் தூண்டியது. பெங்களூருவின் மக்கள் தொகை கடந்த பத்தாண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது. அதாவது தற்போது 13 மில்லியனாக உள்ள மக்கள் தொகை 2031 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 20 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது…

2021 ஆம் ஆண்டு நீர் வழங்கல் ஒரு நாளைக்கு 650 மில்லியன் லிட்டர் குறைந்துள்ளது என்றும் கணக்கெடுப்பு எச்சரித்தது. 2031ம் ஆண்டுக்குள் 1,450 ஆக உயர வாய்ப்புள்ளது.தற்போது பெங்களூருவுக்கு ஒரே ஒரு நீர் ஆதாரம் மட்டுமே உள்ளது. காவிரி ஆறுதான் பெங்களூருவை வளர்க்கிறது, இருப்பினும், அதிகரித்து வரும் தேவை மற்றும் மக்கள் தொகை, பருவநிலை மாற்றம் மற்றும் பிற நிர்வாக காரணிகளால் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

டெல்லி : NITI ஆயோக் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களி டெல்லியும் ஒன்று, டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குளங்கள், ஏரிகள் ஆக்கிரமிப்பு, ஆழ்துளை கிணறுகள் தோண்டுதல், நிலத்தடி நீரை அதிகளவில் பயன்படுத்துதல் போன்ற காரணங்களில் முக்கியமான ஒன்று. இந்தியாவில் நிலத்தடி நீர் பற்றிய தெளிவற்ற சட்டங்கள் உள்ளன.. மேலும், வரும் ஆண்டுகளில், டில்லியின் நிலைமை கடுமையாக மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை : சென்னையில் கடந்த 2019-ம் ஆண்டு எதிர்பாராத சாபமாக கோடை காலம் வந்தது. சென்னையின் நீர்த்தேக்கங்கள் வறண்டு போனதால், அரசாங்கம் ஒரு நாளைக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. பருவநிலை மாற்றம் பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது. கடலோர நகரமாக இருப்பதால், கடல் மட்ட உயர்வு, புயல், மழை, தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றை சென்னை சமாளிக்க வேண்டியுள்ளது. 2015-ல் பெருமழையை சந்தித்த சென்னை, 2019-ல் கடும் கோடையால் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டது.. நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது..

சென்னையில் நிலத்தடி நீர் குறைவாக இருப்பதால், மூன்று ஆறுகள் இருந்தாலும், அபாயகரமான மாசுபாடு காரணமாக அவற்றைப் பயன்படுத்த முடியாததால், இது பல பரிமாணப் பிரச்சனை. சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நகரின் நீர்நிலைகள் 1893ல் 12 சதுர கிலோமீட்டரிலிருந்து 2017 இல் 3.2 சதுர கிலோமீட்டராக சுருங்கியது.

ராஞ்சி : கடந்த பல ஆண்டுகளாக ஜார்க்கண்ட் தலைநகரான ராஞ்சியில் வறண்ட பகுதியாக இருக்கிறது. உள்ளூர் மக்கள் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.. தண்ணீர் பற்றாக்குறைக்காக பல போராட்டங்களையும் நடத்துகின்றனர்.. ராஞ்சியின் பல பகுதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு ராஞ்சியில் 100 குளங்கள் மற்றும் சிறு நீர்நிலைகள் இருந்தன, இப்போது, ​​அந்த எண்ணிக்கை 40 க்கும் குறைவாக உள்ளது. இதனால் இருக்கும் நீர் நிலைகளையாவது பாதுகாக்கவில்லை எனில் எதிர்காலத்தில் மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்படுகிறது..

ஜெய்ப்பூர் : இந்தியாவின் பிங்க் நகரமான ஜெய்ப்பூரில் சராசரியாக 500 மிமீ மழைப்பொழிவு உள்ளது.. இது தேசிய சராசரியான 1100மிமீ விட மிகக் குறைவு. ஜெய்ப்பூர் நிலத்தடி நீரை நம்பியிருப்பதால் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் வருடாந்தர சராசரி மழை குறைவினால் 2019 ஆம் ஆண்டு வரை ஜெய்ப்பூர் நகரின் 13 தொகுதிகள் இருண்ட மண்டலங்களாக மாறிவிட்டன.

Maha

Next Post

ஆயிரம் கோடி கொடுத்தாலும்...! தரம் கெட்டவன் நான் இல்லை..! - நடிகர் ராமராஜன்

Tue Sep 20 , 2022
ராகேஷ் இயக்கத்தில் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் ‘சாமானியன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் நாயகனாக கம்பேக் கொடுக்க இருக்கும் இந்தப் படம் ராமராஜன் நடிக்கும் 45-வது படமாக உருவாகிறது. இந்த டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராமராஜன், “ராதாரவி அண்ணனுடன் இது எனது 4-வது படம். எம்.எஸ்.பாஸ்கர் நான் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் இருந்தே பழக்கம். அவர்கள் […]
ஆயிரம் கோடி கொடுத்தாலும்...! தரம் கெட்டவன் நான் இல்லை..! - நடிகர் ராமராஜன்

You May Like