விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி (வயது 70). இவர், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உயிரிழந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ளது. தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், மக்களவை தேர்தலுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடத்துவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்.
Read More : செம குட் நியூஸ்..!! TNPSC குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு..!! உடனே செக் பண்ணுங்க..!!