fbpx

Byju’s CEO அர்ஜுன் மோகன் திடீர் ராஜினாமா!! காரணம் என்ன?

இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் நிறுவனமான பைஜூஸ்-ன் தலைமை நிர்வாக அதிகாரி அர்ஜுன் மோகன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் நிறுவனமான பைஜூ, குறுகிய காலத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக செயல் அதிகாரியாக அர்ஜுன் மோகன் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளதாகவும், இதனால் பைஜூவின் நிறுவனர் ரவீந்திரன் தலைமைபொறுப்பேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பைஜூ நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு பின்னர், அர்ஜுன் மோகனை தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பைஜூ நிறுவனத்தில் நம்பிக்கைக்குரிய வகையில் செயல்பட்டு வந்த அர்ஜூன் மோகன் வெளியேற்றப்படுவதற்கான காரணங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

அர்ஜுன் மோகனின் வெளியேற்றத்தை தொடர்ந்து, ரவீந்திரன் தலைமைபொறுப்பேற்று அவர் பைஜூவின் செயல்பாடுகளை கண்காணிப்பார். பைஜூ அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், 4 ஆண்டுகளுக்கு பின் ரவீந்திரன் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் மோகன் தனது ராஜினாமாவை ரவீந்திரனிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அதன் பிறகு பைஜூ நிறுவுவனத்தின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். மோகனின் வெளியேற்றத்திற்கு பின்னர் பைஜூவை வழிநடத்தும் ரவீந்திரன், செயற்கை நுண்ணறிவு மற்றும் டியூசன் சென்டர் வாயிலாக பைஜூவை மூன்று பிரிவாக ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் தான் பைஜூ தனது டியூசன் எண்ணிக்கையை 250 அளவில் குறைத்து, பெங்களூரில் செயல்படும் பல அலுவலகத்தையும் காலி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Post

இந்த ஆண்டு அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும்! -பஞ்சாங்கம் கணிப்பு

Mon Apr 15 , 2024
இந்திய அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் என்றும், இந்திய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து சாதனை புரிவார்கள் எனவும் கோயில் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இக்கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கரையில் எழுந்தருளினர். பின் பக்தர்களுக்கு தீர்த்தவாரி உற்ஸவம், சுவாமி, […]

You May Like