fbpx

CAA| குடியுரிமை சட்ட விதிகளுக்கு தடை கோரிய வழக்கு.! மத்திய அரசு விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.!

2019 ஆம் வருடம் பாஜக தலை மேலான மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டமான CAA கடந்த மார்ச் 11-ஆம் தேதி நடைமுறைக்கு வந்ததாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது. மேலும் குடியுரிமை சட்டத்திற்கான விதிகளையும் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்த முஸ்லிம்கள் அல்லாத இந்துக்கள் மற்றும் பிற மதத்தவர்கள் குடியுரிமை பெற தொடங்கியிருக்கின்றனர்.

சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்ட விதிகளை (2024) நிறுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் ஒரு பகுதியை மத்திய அரசிற்கு அனுப்பி வைத்துள்ள உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக ஏப்ரல் எட்டாம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசிற்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

குடியுரிமை திருத்த விதிகள், 2024 க்கு தடை விதிக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை மறுத்த உச்சநீதிமன்றம் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு மத்திய அரசு வருகின்ற ஏப்ரல் 8=ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

CAA எந்தவொரு நபரின் குடியுரிமையையும் பறிக்காது, ”என்று மேத்தா நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்சில் கூறினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், புலம்பெயர்ந்த இந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டால் அதை திரும்பப் பெற முடியாது என்ற வாதங்களை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்விடம் சமர்ப்பித்தார். எனவே இந்த வழக்கு தொடர்பான விவகாரத்தில் விரைந்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் கபில் சிபல் தெரிவித்தார்.

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விதிகளை மத்திய அரசு கடந்த மார்ச் 11ஆம் தேதி வெளியிட்டது. 2019 ஆம் வருடம் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைமுறைக்கு வந்திருக்கிறது. வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்து டிசம்பர் 31, 2014க்கு முன் இந்தியா வந்த இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட, துன்புறுத்தப்பட்ட முஸ்லிமல்லாத புலம்பெயர்ந்தோருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Read More: அதிகமாக செல்போன் பயன்படுத்தினால் மூளையில் கட்டி ஏற்படுமா.? மருத்துவர்களின் கருத்து.!

Next Post

”இந்த வழக்குகளை விசாரிக்கவே கூடாது”..!! ஷாக் கொடுத்த மத்திய அரசு..!! அதிரடி உத்தரவு போட்ட சுப்ரீம் கோர்ட்..!!

Tue Mar 19 , 2024
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 டிசம்பர் 11ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு 2019 டிசம்பர் 12ஆம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. […]

You May Like