திருப்பதி–காட்பாடி ரயில் பாதை 104 கிலோமீட்டர் நீளமுடையது. இந்த பாதையில் இரட்டை ரயில் தடம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.1,332 கோடி ஒதுக்கீடு செய்தது. இது திருப்பதி பாலாஜி கோவிலும், ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலும் செல்லும் யாத்திரிகர்களுக்குச் சிறந்த ரயில் வசதியை வழங்கும்.
வேலூர் மற்றும் திருப்பதியில் உள்ள கல்வி மற்றும் மருத்துவ மையங்களை சிறந்த முறையில் இணைக்கும் வகையில் இந்த புதிய இரட்டை ரயில் பாதை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மற்றும் திருப்பதி வழியாக, தமிழ்நாட்டின் வேலூரை இணைக்கும் புதிய இரட்டை ரயில் பாதை திட்டம் மிக முக்கியமான கட்டமைப்புகளை உள்ளடக்கியதாக அமையவுள்ளது.
இந்த திட்டத்தின் அம்சங்கள்: ஆந்திரப் பிரதேசம் (சித்தூர், திருப்பதி) வழியாக தமிழ்நாடு (வேலூர்) வரை செல்லும் ரயில் பாதையில் 15 நிலையங்கள், 17 பெரிய பாலங்கள், 327 சிறிய பாலங்கள், 7 சாலை மேம்பாலம் , 30 சாலை கீழ் பாலம் ஆகியவை உள்ளன. இந்த திட்டம் 113 கி.மீ நீளமுள்ள பாதையையும், அதிக சரக்கு மற்றும் அஞ்சல்/எக்ஸ்பிரஸ்/பயணிகளை இயக்குவதற்கான கூடுதல் திறனையும் கொண்டிருக்கும்.
இந்த புதிய பாதை, அதிக சரக்கு ரயில்கள், அஞ்சல் சேவைகள், எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கும் திறனை பெரிதும் மேம்படுத்தும். இது ரயில்வே துறையில் ஒரு முக்கியமான கட்டமைப்புப் புரட்சியாக கருதப்படுகிறது.
Read more: Gold Rate: ஒரே நாளில் 2 முறை எகிறிய தங்கம் விலை.. நேற்றை விட 1,480 உயர்வு..!! நகைப்பிரியர்கள் ஷாக்