fbpx

மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்களை 15 நாளில் அகற்ற வேண்டும்.. மின்சார வாரியம் அதிரடி உத்தரவு..

தமிழகத்தில் மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்களை 15 நாளில் அகற்ற மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது..

அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் இதுதொடர்பாக மின்சார வாரியம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.. அதில், மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க, கேபிள் டெலிவிஷன் ஆபரேட்டர்கள், தனியார் ஆபரேட்டர்கள் மூலம் மின் வாரியத்தின் மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி ஒயர்கள், விளம்பர பலகைகள் ஆகியவற்ற அகற்ற வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன..

இப்படி தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தாலும், சில பகுதிகளில் கேபிள் டிவி வயர்கள் மின்வாரியத்தின் மின் கம்பங்களில் கட்டப்பட்டிருப்பது கவனத்திற்கு வந்துள்ளது.. எனவே மனித உயர்களுக்கு ஏற்படும் அசம்பாவித மின் விபத்துகளை தடுக்க, மின்கம்பங்களில் இருக்கும் டிவி ஒயர்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்..
மேலும் இந்த உத்தரவை பின்பற்றாமல், பின்னர் விபத்து ஏற்பட்டால் அப்பகுதியின் மின்வாரிய பொறியாளரே பொறுப்பு..” என்று தெரிவித்துள்ளது

Maha

Next Post

பிற மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

Fri Feb 17 , 2023
தமிழகத்தில் பிற மாநிலங்களில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.. தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் ” நெல்லை, தென்காசி மாவடங்களில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுகிறது.. இதனை தடுக்க கோரி, கடந்த 2018-ம் ஆண்டு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.. அப்போதைய […]

You May Like